2025 மே 01, வியாழக்கிழமை

வீட்டில் வளர்த்த நாய்க்கு திதி கொடுத்த குடும்பம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தமது வீட்டில் வளர்த்த ஜானு என்ற நாய்க்கு, கடற்கரையில் வைத்து கண்ணீர் மல்க திதி கொடுத்துள்ள சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கட லூரை சேர்ந்த குறித்த குடும்பத்தினர் லேபர் வகையைச் சேர்ந்த ஜானு என்ற நாய் ஒன்றை, கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக பாசமாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென உடல் நல குறைவால்  அது உயிரிழந்ததுள்ளது. இதனால், உயிரிழந்த நாய்க்கு அவரது சொந்த நிலத்தில் இறுதி சடங்கு செய்து முடித்தனர்.

மேலும், இன்று ஆடி அமாவாசை என்பதால், கடலூரில் அமைந்துள்ள வெள்ளி கடற்கரையில் உயிரிழந்த ஜானுக்கு கண்ணிருடன் அவர்கள் திதி கொடுத்தனர்.

இன்றைய காலகட்டத்தில் மனிதனை மனிதனே மதிக்காத நிலை உருவாகி வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் வீட்டில் வளர்த்த நாய்க்கு குடும்பத்தினர் திதி கொடுத்தது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .