Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 03 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச. விமல்
உலகக் கிண்ண தொடரின் இந்த வருட போட்டிகளில் குழு H இல் இடம்பிடித்த அணிகளை வைத்து பார்க்கும் போது பலம் குறைவான அணிகள் இந்தக் குழுவில் காணப்பட்டன. எனவே இந்தக் குழு அதிகம் எதிர்பார்ப்பில்லாத குழுவாக மாறிப்போனது. கொலம்பியா அணி மற்றைய அணிகள் போன்று இவர்கள் அதிகம் எதிர்பார்ப்புகளை உருவவாக்கியுள்ளார்கள் எனக்குறிப்பிட முடியாது. குழு நிலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்கள். அதுகூட செனகல் அணியுடனான கடும் போராட்டத்தின் பின்னர் கிடைத்த ஒரு கோல் வித்தியாசத்தினாலான வெற்றியாகும். கொலம்பியா அணி ஜப்பான் அணியிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஜப்பான் அணி பலமான அணியாக தென்படுவதாக தோன்றியது.
ஆனாலும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் போலந்து, செனகல் அணிகளை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது கொலம்பியா அணி. இதன்படி அவர்கள் இந்தக் குழுவில் பலமான அணியாக தென்படுகிறார்கள். ஆனால் இதனை வைத்துக்கொண்டு அடுத்த சுற்றில் இவர்கள் பலமாக விளையாடுவார்கள் என்ற நிலைக்கு வர முடியாது. மூன்றாவது தடவையாக கொலம்பியா அணி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. அடுத்த சுற்றில் அவர்கள் இங்கிலாந்து அணியினை சந்திக்கவுள்ளார்கள். இம்முறை பலமாக தென்படும் இங்கிலாந்து அணியினை இவர்கள் வெற்றி பெறுவார்கள் என கூறுவது கடினமே. ஆனால் இவர்கள் போராடுவார்கள் என நிச்சசயம் கூற முடியும்.
ஜப்பான் அணி கொலம்பியா அணியினை வெற்றி பெற்றதன் மூலம் பலமான அணியாக தென்பட்டாலும், செனகல் அணியுடன் சமநிலை முடிவை பெற்ற அதேவேளை போலாந்து அணியுடன் தோல்வியினை சந்தித்து தடுமாறி கோல் வித்தியாசத்தில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். ஆனால் இந்த நிலையிலிருந்த அணி எவ்வாறு இவ்வளவு பலமாகவும் சிறப்பாகவும் பெல்ஜியம் அணியினை எதிர்கொண்டது என்பது ஆச்சரியமே! 1998 முதல், உலகக்கிண்ண தொடரில் தொடர்ச்சியாக விளையாடிவரும் ஜப்பான் அணி இதுவரையில் காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகவில்லை என்ற நிலையில் இரண்டாம் சுற்றுப் போட்டியில் விளையாடியவர்கள், பெல்ஜியம் அணியினை வெற்றி பெறுவார்கள் என்ற நிலையிலிருந்து தோல்வியடைந்தமை அவர்களின் துரதிஷ்டமே.
செனகல் அணி இந்தக்குழுவில் மூன்றாமிடம் பெற்ற அணி. இறுதிவரையில் இவர்களுக்கான வாய்ப்புகள் காணப்பட்ட போதும் 74 ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணி அடித்த கோலின் மூலம் அவர்களின் அடுத்த சுற்று கனவு தகர்ந்தது. போலந்து அணியிடம் ஜப்பான் அணி தோல்வியடைந்த காரணத்தினால் செனகல் அணிக்கான வாய்ப்பு உருவாகியது. ஒரே நேரத்தித்தில் ஆரம்பித்த இந்த குழு நிலை போட்டிகளில் போலாந்து அணி தமக்கான இரண்டாம் சுற்று வாய்ப்பினை இழந்த நிலையில் ஜப்பான் அணிக்கு 59 வது நிமிடத்தில் அடித்த கோலின் மூலமாக செனகல் அணிக்கான வாய்ப்பு உருவானது. ஆனால் தோல்வியடைந்ததன் மூலம் அது இல்லாமல் போனது.
தரப்படுத்தல்களின் அடிப்படையில் இந்தக் குழுவின் பலமான அணி போலந்து அணி. ஆனால் அவர்களால் இந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை. எட்டாமிடத்தில் உள்ள அணி. அவர்களுக்கு பின்னால் உள்ள அணிகளுடன் தோல்விடையைந்து உலகக்கிண்ண வாய்ப்பினை இழந்துள்ளார்கள். இரண்டு உலகக்கிண்ண தொடர்களுக்கு பின்னர் மீண்டும் வாய்ப்பை பெற்றவர்கள் இம்முறை 25 ஆம் இடத்தை பிடித்து உலகக்கிண்ண தொடரிலிருத்து வெளியேறினார்கள். ஜப்பான் அணியுடன் வெற்றி பெற்றதன் மூலம் இம்முறையும் ஒரு வெற்றியினை பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் உலகக்கிண்ண போட்டி தொடர்களில் விளையாடிய வேளைகளில் ஒரு வெற்றியைத்தானும் பெறாமல் உலகக்கிண்ண தொடர்களில் இருந்து வெளியேறியதில்லை.
புள்ளி விபரம்
1 கொலம்பியா 3 2 0 1 5 2 3 6
2 ஜப்பான் 3 1 1 1 4 4 0 4
3 செனகல் 3 1 1 1 4 4 0 4
4 போலந்து 3 1 0 2 2 5 -3 3
போட்டி முடிவுகள்
கொலம்பியா vs ஜப்பான் 1 - 2
போலந்து vs செனகல் 1 - 2
ஜப்பான் vs செனகல் 2 - 2
போலந்து vs கொலம்பியா 0 - 3
ஜப்பான் vs போலந்து 0 - 1
செனகல் Vs கொலம்பியா 0 - 1
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
5 hours ago