2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

10 லட்சம் பெறுமதியுடைய கடல் அட்டைகள் பறிமுதல்

Janu   / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய  250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (4) இரவு கியூ பிரிவு பொலிஸார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்திய தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதுடன்  அங்கிருந்து மூவர் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து சக்கர கோட்டை குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனில் பதப்படுத்தி பின் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X