Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னி மாவட்டத்தில் இடை நிறுத்தப்பட்டிருந்த 11 பாடசாலைகளின் மீள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புதன்கிழமை (04) தெரிவித்தார்.
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போதே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ மீள்குடியேற்ற செயலணி ஊடாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இடை நிறுத்தப்பட்டிருந்த வன்னி மாவட்டத்தில் உள்ள 11 பாடசாலைகளின் மீள் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சரிடம் நான் கோரிக்கையை முன் வைத்திருந்தேன். இதன்போது எனது கோரிக்கையை ஏற்று அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் வன்னி மாவட்டத்தில் 11 பாடசாலைகளின் கட்டுமானப் பணிகள் மீள இடம்பெற்று மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் ” என தெரிவித்தார்.
க. அகரன்
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago