R.Tharaniya / 2025 ஜூன் 08 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சல்லிக்கற்கள் ஏற்றி வருவதைப் போன்று மரக்குற்றிகளுக்கு மேலே சல்லிக்கற்கள் ஏற்றி மரங்கள் கடத்தப்பட்டன.
இவ்வாறு மிகவும் சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட 15இலட்சம் ரூபா பெறுமதியான 18 காட்டுத் தேக்கு மரக் குற்றிகள் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் மீட்கப்பட்டன. அதனையடுத்து டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவத்தை சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன வின் வழிகாட்டலில், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் செயற்பட்டு வரும் போதைப்பொருள் குற்றச் செயல் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக இந்த மரக்கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
எஸ் தில்லைநாதன்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago