Editorial / 2023 செப்டெம்பர் 01 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனத்தினர் மற்றும் மீனவ சமூகங்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்கள் "அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, கடற்றொழில் அமைச்சரே இந்திய இழுவை படகுகளின் வருகையை நிறுத்துங்கள், கைதுசெய் கைதுசெய் இந்திய இழுவைப் படகுகளை கைது செய் என கோஷமிட்டு, பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்



31 minute ago
47 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
54 minute ago