2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்களுக்கிடையில் அடிதடி ; ஒருவர் காயம்

Janu   / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர்களிற்கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (21) பதிவாகியுள்ளது.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்  கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரை  தொடர்பு கொண்டு கேட்டபோது,  சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X