Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் சற்றுமுன்னர் விபத்து இடம் பெற்றுள்ளது. அதில், ரிப்பர் வாகனத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
மாடு ஒன்று வீதிக்கு குறுக்காகச் சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஒன்று மாட்டில் மோதுண்டு உள்ளது. பேருந்து விபத்துக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்காக வேகத்தை குறைத்து பேருந்தை சாரதி நிறுத்தியுள்ளார்.
எனினும் பேருந்துக்கு பின்னால், சென்று கொண்டிருந்த படி ரக வாகனத்தின் சாரதி, பேருந்தில் மோதி விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தனது வாகனத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.
எனினும், அவ்விரு வாகனங்களுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த ரிப்பர், வேக கட்டுப்பாட்டை இழந்து படி ரக வாகனத்துடன் மோதியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago