Janu / 2025 மே 29 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடுகள் கையளிப்பு நிகழ்வானது கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் புதன்கிழமை(28) இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையிலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.
குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மானிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கையளிப்பு நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் அரவிந்த ஸ்ரீநாத், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சண்முகம் தவசீலன்



4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago