R.Tharaniya / 2025 ஜூலை 18 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைகடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் வியாழக்கிழமை (17) அன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மற்றும் இம் மாதம் 01 திகதி அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடல்ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்து 15 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
பின்னர் குறித்த மீனவர்களையும்,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலை மன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்
இந்தநிலையில் குறித்த வழக்குஇன்றையதினம்வியாழக்கிழமை (17) அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம்திகதிவரைவிளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
எஸ்.ஆர்.லெம்பேட்
53 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
4 hours ago
8 hours ago