2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இலங்கைக்கு பீடி இலைகளை கடத்தியவர் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 30 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில்இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக  லொரியில் கொண்டு வரப்பட்ட பீடி இலை பண்டல்களை மடக்கிப் பிடித்த கியூ பிரிவு பொலிஸார்.

இது சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பெயரில் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள், சுக்கு, கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலை பண்டல்கள் உள்ளிட்டவைகள்அதிக அளவு இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை (30)அன்று அதிகாலை இராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள்  கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குநு கியூ பிரிவு பொலிஸார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை படகில் ஏற்றி கொண்டிருந்தபோது அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற போது  கடலில் படகில் இருந்த இருவர் 10 மூட்டை பீடி இலை பண்டல்களுடன் கடல் வழியாக தப்பினர்.

மேலும் பீடி இலை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாகசந்தேகிக்கப்படும் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த  பாலகிருஷ்ணன் என்பவரை பிடித்து  ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 மேலும் கடல் வழியாக தப்பிச் சென்ற மர்ம நபர்கள் இருவர் குறித்து கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X