2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

உழவு இயந்திரங்கள் பறிமுதல்

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

இராணுவத்தினரால்  இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் (17)ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைக்கப்பட்டது.
 
இதன் போது அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகம்வில் ஈடுபட்ட இரண்டு உழவியந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
 
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X