2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சனிக்கிழமை (25) அன்று காலை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய விபத்து  இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள சமிக்கை விளக்குப் பொருத்திய பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம் ஏனைய வாகனங்களுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது சமிக்ஞை விளக்கின் புறப்படுகை சமிக்ஞைக்காக எதிர் பகுதியில் காத்திருந்த ஐந்து வாகனங்களின் மீது குறித்த ஹயஸ் வாகனம் சமிக்ஞை இலக்கங்கள் முடிவடையும் வேளையில் வேகமாக கடந்து செல்ல முற்பட்ட போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பஸ், மோட்டார் சைக்கிள், கப் ரக வாகனம், ஹயஸ் உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

இதனால் குறித்த இடத்தில் சற்று நேரம் பதட்டம் ஏற்பட்டது. இதன்போது அறுவர் காயமடைந்தனர்.

பலத்த காயங்களுக்குள்ளாகிய ஒருவர் உட்பட நால்வர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏனைய இருவரும் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  கோப்பாய் பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .