Freelancer / 2023 ஜூலை 02 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் சனிக்கிழமை (1) 85 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற போது வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய மன்னார் பேசாலை,மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்களும்,மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்,வாகனம்,மோட்டார் சைக்கிள் ஆகியவை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. றொசேரியன் லெம்பேட்
3 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago