2025 மே 19, திங்கட்கிழமை

கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று (16) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தாம் செல்கின்ற ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே அமைச்சின் உயரதிகாரிகளுடன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து பொதுவானதொரு முடிவு எட்டப்படும் என தெரிவித்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X