Janu / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார், மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கிராம் கடல் அட்டைகளை ஞாயிற்றுக்கிழமை (02) காலை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத் துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்டபம் தோணித்துறை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்ட நாட்டு படகொன்றை சோதனை செய்துள்ளதுடன் அதில் 80க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்து 1360 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடல் அட்டைகளுடன் படகு பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் படகில் இருந்து கடலில் குதித்து தப்பித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் இந்திய மதிப்பு ஒரு கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
சுங்கத்துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து பறிமுதல் செய்த கடல் அட்டைகள் அடங்கிய சாக்கு மூட்டைகள் மற்றும் நாட்டு படகை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்

3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago