Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரின் மேற்கொள்ளப்படும் கனியவள அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்புடன் கருநிலம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சனிக்கிழமை (23) மாலை இடம்பெற்றது.
"இந்த மண் எங்களின் உரிமை" "எங்கள் எதிர்காலத்திற்கான வளத்தை அழிக்காதே" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி வழியாக கடை வீதியூடாக சென்று கொரவப்பதான வீதியில் சென்று தமது ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் வவுனியா மாவட்ட இளைஞர்கள், மன்னார் மாவட்டத்தில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ. மயூரன், கலைஞர் மாணிக்கம் ஜெகன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
க. அகரன்
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago