Janu / 2025 ஜூன் 15 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - பொன்னாலை காட்டு பகுதியில் சனிக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் துவிச்சக்கர வண்டிகள் ஐந்து மீட்கப்பட்டன.
மாதகல் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு 293 கிலோ 497 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
பு.கஜிந்தன்

1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago