2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொரியர் சேவை மூலம் போதை கடத்தியவர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 20 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியர் தபால் சேவையின் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 03ம் ஆண்டில் கல்வி கற்கும் 23 வயதுடைய சியம்பலாவெவ, ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கும் மாணவனொருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் 45 மயக்க மருந்து மாத்திரைகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .