Editorial / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடமிருந்து 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
ஆலய தேர் திருவிழா புதன்கிழமை (30) நடைபெற்றது. அதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அவ்வேளையில், சன கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தோரிடமிருந்து நகைகளை திருடி உள்ளனர்.
நகை திருட்டுக்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. முறைப்பாட்டின் பிரகாரம் சுமார் 25 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
எஸ் தில்லைநாதன்
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026