R.Tharaniya / 2025 ஜூன் 05 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் 15 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார்.
துன்னாலைப் பகுதியில் புதன்கிழமை (04) அன்று காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது துன்னாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கசிப்பை எடுத்துச் சென்ற ஒருவரை மறிக்க முற்பட்டபோது கசிப்புக் கலனை வீசிவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட கலனில் இருந்த 15 லீற்றர் கசிப்பைக் காங்கேசன்துறை பிராந்தியக் குற்றத் தடுப்புப் பிரிவினர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.
எஸ் தில்லைநாதன்

3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago