2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தெருநாய்களை வளர்க்கும் குடும்பம்

R.Tharaniya   / 2025 மார்ச் 13 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரத்தில் அநாதரவாக நிற்கின்ற நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று அவற்றினை வளர்த்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்கள் சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர்.

அயல் வீட்டில் உள்ள ஒருவர் அவர்கள் வளர்க்கும் நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களது நாய்கள் காணாமல் போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் மூலம் நாய்களை கண்டுபிடிக்கின்றன.

குறித்த குடும்பத் தலைவர் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபயணம் ஒன்றை மேற்கொண்டு, பலரது கையொப்பங்களை பெற்று நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றுவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X