2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தேவகுளத்தில் சடலம் மீட்பு

R.Tharaniya   / 2025 மார்ச் 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (17) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரின் சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் காணப்படுவதோடு குறித்த பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலத்தை திங்கட்கிழமை (17)  காலை அவதானித்த ஊரவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்கள் சடலத்தை மீட்டதோடு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .