Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 20 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சி கிழக்கு தாளையடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம் திங்கட்கிழமை (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கரவெட்டி மத்தொனி தாழங்குழியில் அமைக்கப்பட்ட நீர் தாங்கியின் இருந்து நீர் வழங்கும் நிகழ்வில் பிராந்திய பொறியியலாளர் உதயசீலன், யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி யசோதரன், பருத்தித்துறை நீர் வழங்கல் சபை பொறுப்பாளர்
மதிவாணன், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் தலைவர் இராகவன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நீர் விநியோக செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர்.
யாழ்ப்பாணம் - தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு.
இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ் தில்லைநாதன்
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago