2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

படகு விபத்தில் இளைஞன் பலி

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர்உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செவ்வாய்க்கிழமை (26) அன்று வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மட்டியின்  வாடியில் கரைவலை மீன்பிடி நடவடிக்கை ஈடுபட்டிருந்த போது வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியில் கடும் காற்றுடன்  கூடிய காலநிலை காணப்பட்டது

இதன் போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது அதே படகு அலையில் சிக்குண்டு குறித்த இளைஞன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

சடலம் நித்திய வெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .