Editorial / 2026 மார்ச் 08 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் பனைமரங்களைக் கடத்த முற்பட்ட மூவர் மருதங்கேணி பொலிஸாரால் சனிக்கிழமை (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி பகுதியில் நீண்டகாலமாக பனைமரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு, வெளிமாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக பொலிஸாருக்குத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வந்தன. இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பின் போது:
உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெட்டப்பட்டு, கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பனைமரங்கள் கைப்பற்றப்பட்டன.
இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி பொலிஸார், அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
31 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
54 minute ago
2 hours ago