Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 18 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக உதயகுமார் யுகதீஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 9 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 4 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்திக்கு 4 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழுவிற்கு 2 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு 1 உறுப்பினருமாக மொத்தம் 20 உறுப்பினர்கள் கொண்ட சபையில் ஏகமனதாக தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் தெரிவு செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது.
தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.
உப தவிசாளராக கனகரத்தினம் சிறிகாந்த் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பேச்சாளர் ஐ.ரங்கேஸ்வரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago