2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

பருத்தித்துறையில் ​ பொலித்தீன் தடை

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் யுகதீஷ் தலைமையில் அக வணக்கத்துடன் வெள்ளிக்கிழமை (29)  ஆரம்பமானது.

இதில் முக்கிய தீர்மானங்களாக பருத்தித்துறை பிரதேச சபையால், செப்டம்பர் மாதத்தை பனை விதை நடும் மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 10,000/- பனை விதைகள் நடுவது என்றும்,  சபை எல்லைக்குள் மூன்று மாதத்திற்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துதல் என்றும், சபை வீதிகளுக்கு  ஊரிக்களி மண்  பயன்படுத்தி அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் நிதிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் கணக்குகள் சம்பந்தமாக சபையில் உரையாடப்பட்டது. 

பருத்தித்துறை நகர சபையின் உக்காத கழிவு பொருட்களை பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் மூன்று மாத காலங்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி கொடுப்பதாகவும் ஒரு உழவு இயந்திர  பெட்டி குப்பைக்கு ரூபா 5000  அறவிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற சபை அமர்வில் 20 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X