2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Janu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (23) பதிவாகியுள்ளது.

கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற மாணவியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்  சனிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம்  தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X