2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புகையிரத இணைப்பு பஸ் சேவை தட்டுப்பாடு

R.Tharaniya   / 2025 மார்ச் 12 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறையில் இருந்து கொடிகாமத்துக்கு புகையிரத இணைப்பு பஸ் சேவை நடத்தப்படாமையினால் வடமராட்சிப் பிரதேசத்திலிருந்து புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகள் பொது சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
 
தற்போது கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவைகள் இடம்பெற்றுவருகின்றது. இச் சேவையைப் பெறுவதற்காக வடமராட்சி பிரதேச பயணிகள் பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம் புகையிரத நிலையம் சென்று வர புகையிரத பஸ் இணைப்புச் சேவையின்றி அல்லல் படுகின்றனர்.குறிப்பாக இரவு நேரத்தில் கடுகதி புகையிரதத்தில் பயணிப்போர் உரிய நேரத்தில் சென்று வர பருத்தித்துறை இ.போ.ச டிப்போவில் எந்தவிதமான ஒழுங்குகளும் செய்யப்படவில்லை
 
இரவு நேர புகையிரதத்தில் கொழும்பு உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கு பயணிக்கும் பயணிகள் புகையிரதம் புறப்படுவதற்கு இரண்டு மணித்தியாலயத்தில் முன்பாகவே  கொடிகாமம் பயணிக்க          வேண்டியுள்ளது. அதே நேரம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும் புகையிரதம் அதிகாலை 4 மணிக்கு கொடிகாமத்தை வந்தடைகிறது. அதில் வந்திறங்கும் பயணிகள் கொடிகாமம் பஸ் நிலையத்தில் மணிக்கணக்காக காத்திருந்து காலை 6 மணிக்கு பருத்தித்துறை நோக்கிப் புறப்படும் தனியார் பஸ் வண்டியிலேயே பயணிக்க வேண்டியுள்ளது.
அத்துடன் பருத்தித்துறை கொடிகாமம் பிரதான பாதையில் பருத்தித்துறை இ.போ.ச டிப்போ சீரான ஒழுங்கமைந்த சேவையை நடத்தையினால் பயணிகள் தனியார் பஸ் சேவைகளையே நம்பி இருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
 
பருத்தித்துறை கொடிகாமம் பிரதான பாதையில் சேவையில் ஈடுபடுத்தும் தனியார் சிற்றூர்தி சேவை சங்கத்தினர் புகையிரத பயணிகள் பயணக் கஷ்டங்களை தெரியாதது போல்  வருகின்றனர்
உரிய திணைக்களங்கள், சபைகள் இக் குறையை போக்க உரிய கவனம் செலுத்துவார்களா
என வடமராட்சிப் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
எஸ் தில்லைநாதன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X