Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 26 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (26) அன்று சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதன் தாக்கம் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், குடும்பத்தவர்கள் என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரிடத்திலும் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
இதனால் குடும்பங்களிடையே பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு போதைப்பொருள் பாவனையில் இருந்து அனைவரையும் மீட்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்"போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவை தானா?, அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை கொடுப்போம், போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்" எனும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினர் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்திற்கு சங்கானை பிரதேச செயலகத்தினர்,வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினர், மானிப்பாய் பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸார், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர்,அந்திரான் தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆதரவு வழங்கினர்.
பு.கஜிந்தன்
14 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago
42 minute ago