Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய குறித்த இளைஞனை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இளைஞனை முற்படுத்தியபோது பொலிஸாரால் சந்தேகநபரை இரண்டு நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அதற்கமைய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபருடன் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை சேர்ந்தவர்களை மற்றும் போதைப்பொருளை வாங்கியவர்களை இனம் கண்டுகொண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago