Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 03 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு மன்னாரில் செவ்வாய்க்கிழமை(3) அன்று இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோகட்சியின் மன்னார் மாவட்டதலைமைஅலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்துஉள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயகதமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது சத்தியபிரமாணத்தை மேற்கொண்டனர்.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோகட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்ட ஜி.எம்.சீலன் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவித்து வருகை தந்தது அவர்களது உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
சத்திய பிரமாண நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர் குமரேஸ்,புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஜேம்ஸ்,தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன்,சுயேட்சை குழுவின் தலைவர்ஜி.எம்.சீலன்,ஆகியோர் கலந்து கொண்டதோடு,அவர்கள் முன்னிலையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்
48 minute ago
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
16 Oct 2025