Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபடும் அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது பொலிஸாரின் சமிக்கை கட்டமைப்பை மீறி பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன் போது குறித்த டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் பொலிஸார்தெரிவித்தனர். மேலும் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டளள்தோடு,மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரச மற்றும் தனியார் காணிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் அடம்பன் பொலிஸார் மௌனம் காத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபடும்
அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது பொலிஸாரின் சமிக்கை கட்டமைப்பை மீறி போலீசார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது. இதன் போது குறித்த டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ளள்தோடு,மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரச மற்றும் தனியார் காணிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் அடம்பன் பொலிஸார் மௌனம் காத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago