2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி நபர் இந்தியாவுக்கு ஓட்டம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும் இயந்திரத்தையும் திருடி இந்தியா தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது . 

குறித்த நபர் திங்கட்கிழமை (13)அன்று தப்பிச் சென்றுள்ளார்.  செவ்வாய்க்கிழமை (14) அன்று குறித்தநபர் பயணித்த படகு தமிழ்நாடு மண்டபம் மரைக்கார் பட்டினம் கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

தப்பிச் சென்ற நபர் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை .  குறித்த நபர் குடும்பத்தில்ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள்  இருப்பதாகவும் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் மேலதிகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த நபர் திருடிச் சென்றது இரண்டு தொழிலாளர்களின்படகு மற்றும் இயந்திரம். இதனால் குறித்த இரண்டு குடும்பத்தினர் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X