2025 மே 15, வியாழக்கிழமை

மருதங்கேணி விவகாரம் ; ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம்

Janu   / 2023 ஜூன் 22 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரின் அழைப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பரமசிவன்(சிவா) ஆகியோர் குறித்த வாக்குமூலத்தை இன்றையதினம் வழங்கினர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஜுன் 2ம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்ட கூட்டத்தில் புலனாய்வுப் பிரிவினைச் சேந்தவர் சென்றிருந்த நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டதுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தின.

குறித்த காணொளிகள் மற்றும் செய்திகள் ஊடகங்களில் வெளியானமை தொடர்பாகவே குறித்த ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .