Editorial / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொசேரியன் லெம்பேட்
மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சனிக்கிழமை (25) மதியம் மடக்கிப் பிடித்துள்ளனர்.இரண்டு மாடுகளை திருடிய நிலையில் மூவர் இவ்வாறு பிடிக்கப் பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
நானாட்டான் பிரதேசத்தில் உமநகரி வீதியில் சனிக்கிழமை (24) இரவு மாடுகளை கொண்டு செல்வதற்காக சந்தேகிக்கும் வகையில் ஆட்டோவில் சுற்றித்திரிந்த மூவர் அப்பகுதி இளைஞர்கள் சிலரை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளனர் .
கிராமத்து இளைஞர்கள் அவர்களை துரத்திச் சென்று மன்னார் தள்ளாடி பெரிய பாலத்தடியில் பிடித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர்கள் மன்னார் நகரப் பகுதியில் சாவற்கட்டு,மற்றும் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது
திருடப்பட்ட மாடுகள் கட்டைக்காடு மற்றும் மற்றும் உமாநகர் கிராமங்களை சேர்ந்த உரிமையாளர்கள் உடையது என தெரிய வந்துள்ளது.குறித்த இரு மாடுகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முருங்கன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
நானாட்டான் பிரதேசத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலையில் பாரிய சிரமப் பட்டு வளர்க்கும் கால்நடைகள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
28 minute ago
42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
42 minute ago
57 minute ago
1 hours ago