Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 08 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய துணை தூதரக ஸ்தானிகர் சாய் முரளி அவர்கள் வெள்ளிக்கிழமை 06 அன்று ஊர்காவற்றுறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சமூகத்துக்காக மீன்பிடி வலைகளும் உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களும் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் ஊர்காவற்றுறை மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
துணை தூதரக ஸ்தானிகர் சாய் முரளி நிகழ்வில் உரையாற்றிய போது ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதியென்று குறிப்பிட்டார்.
இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடி வலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.
உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது, இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவை திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்க உள்ளது என்ற உறுதியை துணை தூதரக ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.
வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு,கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்களை அவர் விளக்கினார்.
வட மாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்றுறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்தது என்றும் என்றும் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நம்பிக்கையும்,வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நண்பனாகவும் துணையாகவும் இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.
பு.கஜிந்தன்
எஸ் தில்லைநாதன்
56 minute ago
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
16 Oct 2025