R.Tharaniya / 2025 ஜூலை 17 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று வியாழக்கிழமை (17) அன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இருக்கும் வயலுக்குள் பாய்ந்துள்ளது.
குறித்த பேருந்து அண்ணளவாக 10-15 km h வேகத்தில் சென்று கொண்டிருந்த வேளை வலது புறமாக வீதிக்கு மாறி மெதுவாக சென்று வயலில் விழுந்தது. இருப்பினும் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிராபத்து ஏற்படவில்லை.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பு.கஜிந்தன்
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025