2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யாழ். பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்

Janu   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க செவ்வாய்க்கிழமை (12) காலை நேரில் சென்று பார்வையிட்டார்

யாழ். மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இவ் விஜயத்தின் போது யாழ் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர் .

இவ் விஜயத்தை தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும், கூட்டுறவு வங்கி தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது

 நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X