Janu / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - வலிகாமம் பிரதேசத்தை சேர்ந்த மூத்த விவசாயி ஒருவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தொடர்ச்சியாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்த நாகநாதர் தர்மராசா என்கிற மூத்த விவசாயி 'ஏராள் வேந்தன்' எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவரோடு விவசாயத்தில் பக்க பலமாக இருந்த அவரின் மனைவிக்கும் சேர்த்து சிறப்புக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருதினை கழகச் சிறுவன் ரவிசங்கர் யக்சன் மற்றும் சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தினர் இணைந்து வழங்கி வைத்தனர்.


36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago