Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Janu / 2025 ஜூலை 15 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்த ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளதுடன் குறித்த நபர், தனது சகோதரியின் குடும்பத்தினருடன் மற்றும் சகோதரியின் கணவனுடன் முரண்பட்டுள்ளார்.
குறித்த நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் திங்கட்கிழமை (14) அன்று மது அருந்தியுள்ளார்.
அவ்வேளை , ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற போது நிறை போதையில் இருந்த கும்பல் அவ்விளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து , மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்கு தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
29 minute ago
37 minute ago