Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 19 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவானார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும்மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் புதன்கிழமை (18) அன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
35 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 11 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆறு ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தலா 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில்போட்டியிட்ட சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பத்மநாதன் சாருஜன் 9 வாக்குகளையும் பெற்றனர். உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொன்னுத்துரை தங்கராசா தெரிவானார்.
நிதர்சன் வினோத்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago