Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 16 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மா நகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டணியை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாநகர சபைக்கான மேயர்,பிரதி மேயர் தெரிவு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவ நந்தினி தலைமையில், வவுனியா மா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் திங்கட்கிழமை (16) அன்று காலை நடைபெற்றது.
இதன்போது மேயர் தெரிவு மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது.அந்த வகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கரனுக்கு10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனடிப்படையில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதி மேயருக்கான தெரிவு இடம்பெற்றது.
பிரதி மேயராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சை குழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியன்பிரேமதாச அவர்களுக்கு 10 வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.
3 minute ago
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
23 Aug 2025
23 Aug 2025