2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வெள்ள அபாய எச்சரிக்கை

Janu   / 2023 டிசெம்பர் 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால்  பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

மேலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பாலியாறு மற்றும் பரங்கியாறு போன்ற ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்வடையும் நிலை ஏற்பட்டு மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் எனவே குறித்த வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அரிவித்துள்ளது.

அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன் பிட்டி,பகுதியில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 161 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான உணவு இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.றொசேரியன் லெம்பேட் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X