2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'அபிவிருத்தி திட்டங்களுக்கு 1,440 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு'

Niroshini   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தின் 05 ஆண்டு கால அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐரோப்பியன் யுனியன் 1,440 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக அம்பாறை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 05 ஆண்டு கால அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரை கிராம மட்டத்தில் மக்களின் தேவைகளை இனங்கண்டு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ் வேலைத் திட்டங்களுக்கு மக்களின் பங்களிப்பு மிக அவசியமாகும். மக்களால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளுக்கேற்பவே வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இங்கு முன்வைக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தான் 05 வருட காலத்துக்கு மேற்கொள்ளப்படும். இதற்கமைய மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி , சுகாதாரம், கால்நடை, விவசாயம், போக்குவரத்து, பாதை போன்ற திட்டங்கள் இந் நிதி மூலம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X