Editorial / 2017 ஜூலை 21 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில், முச்சக்கர வண்டியிலிருந்த அலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரையும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீவான் நீதமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், நேற்று (20) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, சவளக்கடை பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 8ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியை, இரு நபர்கள் கையடக்கத் தொலைபேசி திருடிச் சென்றுள்ளதாக உரிமையாளரால் சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம் முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றைய நபரை பொலிஸார் புதன்கிழமை (19) மாலை கைதுசெய்திருந்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இரண்டாம் சந்Nதுக நபரையே, எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
9 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
5 hours ago
8 hours ago