2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஆற்று மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, சம்மாந்துறை நெய்னாகாடு ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர், இன்று (24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சம்மாந்தறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மண் அகழ்வுக்குப் பயன்படுத்திய  பெரிய ரக டிப்பர் வண்டிகள் 3 மற்றும் உழவு இயந்திரமொன்றையும்  கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--