Niroshini / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை சவளக்கடைப் பிரதேசத்தில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து ஆடை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சன் இன்று புதன்கிழமை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதோடு பொருட்களை அரச உடமையாக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (06) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அந்நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago