2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கருத்தரங்கு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 28 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலைய வெளிவாரிப் பட்ட மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கு மறு அறிவித்தல்வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ்.உமர் பாறூக் இன்று (28) வியாழக்கிழமை தெரிவித்தார்.

1ஆம் வருட 1ஆம் பருவ புதிய பாடத்திட்டத்துக்;கான வெளிவாரிப்பட்டப்படிப்பு மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கானது கடந்த 17ம் திகதி முதல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட நிலையங்களில் நடைபெற்று வருகின்றது.

இக்கருத்தரங்கானது, கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மறுஅறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
ஆனால், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அட்டவணைப்படி கருத்தரங்கு நடைபெறுமென உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .